வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும் …. பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும் …
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஜாதி முல்லை, மல்லிகை, பாதிரி, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும் …
தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது ,தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும் …
நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும் …
துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது …
ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது ..
வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது …
அசைவ கழிவுகள், மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது ..
சந்தன முல்லை, துளசி, பவளமல்லி, பன்னிர் செடி, திருநீர்பத்திரி, கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும் .
கோபுரம் நிழல், அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும். மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது.





Leave a Reply