உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காக கடன் வாங்கியிருக்கிறார்கள். கடனை அடைக்க வழி தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் மீது கடன், குழப்பத்தில் நிற்கிறார்கள்.

குடும்பத் தலைவரின் கடன் குடும்பத்தையே முடக்கிவிடும். கடன் பிரச்சனையை தீர்க்க சில ஆன்மீக பரிகாரங்கள் உள்ளன. எந்த பரிகாரத்தை எளிதாக செய்ய முடியுமோ, அதை நம்பிக்கையுடன் செய்யுங்கள், பலன் கிடைக்கும்.

கடன் பிரச்சனையை தீர்க்க நாம் செய்ய வேண்டியது ஒரு எளிய பரிகாரம். முதலில் சிறுபருப்பு என்ற பாசிப்பருப்பை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு, 1 கைப்பிடி வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

மறுநாள் காலையில் நன்றாக ஊறவைத்த பருப்பை எடுத்து உங்கள் கையால் பசுவிற்கு கொடுக்கவும். பிறகு கடன் அனைத்தும் தீர வேண்டும் என்று அந்த கோமாதாவை வேண்டிக் கொள்ளுங்கள், கடன்கள் அனைத்தும் தீரும்.

பசுவின் ஆசிகள் மனதளவில் உங்களுக்கு வரும். உங்கள் கைகளால் எவ்வளவு பசுக்களுக்கு உணவளிக்கிறீர்களோ, அவ்வளவு செல்வமும் செழிப்பும் உங்களைச் சேரும். அதேபோல, ஒரு கை பிடி பச்சரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து, சர்க்கரை மற்றும் வாழைப்பழத்துடன் கலந்து காலையில் மாட்டுக்கு கொடுக்கலாம்.

இதனால் நமது வருமானம் அதிகரிக்கும். அனைத்து கடன்களையும் எளிதாக திருப்பிச் செலுத்துவீர்கள். முயற்சி செய்ய இது எளிதான தீர்வு.

பாசிப்பருப்பை வாங்கி தானம் செய்யலாம். புதன்கிழமை அன்று கோவிலில் உள்ள குருக்களுக்கு பாசிப்பருப்பை வாங்கி தானம் செய்யலாம். ஆதரவற்றோர் வாழும் ஆசிரமங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். ஒரு கிலோ பாசிப்பருப்பை வாங்கி ஏழை குடும்பத்திற்கு தானம் செய்யலாம். அதை அவர்கள் சமைத்து சாப்பிட்டால் உங்கள் குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகள் தீரும்.

பாசிப்பருப்பை வாங்கி உங்களால் முடிந்த அளவு தானம் செய்யுங்கள். பண பிரச்சனைகள் குறையும். வீட்டில் உள்ள அனைத்து மன பிரச்சனைகளும் தீரும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கடன் பிரச்சனைகளை தீர்க்க விரும்புபவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை எடுத்து பலனை அடையலாம்.

கோயிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயசம் செய்து ஏழைகளுக்கு கொடுப்பது மிகவும் விசேஷம். உங்கள் கைகளால் பாசிப்பருப்பு பாயசம் செய்து ஆசிரமத்திற்கு தானம் செய்யுங்கள். அதே போல் வறுத்த பாசிப்பருப்பை கடைகளில் வாங்கி காகங்களுக்கு உணவாக கொடுப்பது மிகவும் நல்லது.

குல தெய்வ வழிபாடு கடன் தீர சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. குலதெய்வத்தை அறிந்தவர்கள் இந்த பரிகாரத்தை வீட்டின் பூஜை அறையில் செய்யலாம். பௌர்ணமி நாளில் குலதெய்வ உருவத்தை அலங்கரித்து, அம்மனுக்கு இஷ்டமான அர்ச்சனை செய்து, தூபம், தீபம், ஆரத்தி செய்து நேர்த்தியுடன் அர்ச்சனை செய்யலாம்.

ஒன்பது பௌர்ணமிகளுக்கு இதைச் செய்யுங்கள். கண்டிப்பாக குல தெய்வம் கடனை தீர்க்க வழி காட்டுவார். சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வார் சன்னதியில் 12 சுற்று வந்து துளசி மாலை அணிவிக்கவும். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும், கடன் பிரச்னைக்கு தீர்வு காண மனதார பிரார்த்தனை செய்யுங்கள். இதை தொடர்ந்து 12 வாரங்கள் செய்து வந்தால் கடன் தீரும்.

நரசிம்மர் ருணத்தை நீக்குபவர். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்ய மஞ்சள் மற்றும் தேன் வாங்கிக்கொடுக்கலாம். கடன் சுமை அதிகமாக இருக்கும்போது, ​​சனி ஹோரையில் ஆஞ்சநேயரை அல்லது விநாயகப் பெருமானை வழிபடவும்.

இவ்விரண்டையும் வழிபட்டால் கடன் சுமை குறையும். பெரிய கோவில்களுக்கு செல்லும்போது அங்குள்ள யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. இதனால் கண் திஷ்டி நீங்கும். கடன் பிரச்னை தீரும். கடன் பட்டவர்கள் திருப்பிச் தரும்போது குளிகை நேரத்தில் கடனை திருப்பித்தர விரைவில் கடன் செலுத்தப்படும்.

Leave a Reply

Trending

Discover more from Tamil Vastu

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading