இந்தக் கோயில்கள் தேக ஆரோக்கியம் மற்றும் கடன் தொல்லை தீர நிச்சயம் உதவும் என்பது ஜோதிட வல்லுநர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

முதலில் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் உண்டியல் பணம் போடுவதை காட்டிலும், மடப்பள்ளிக்கு வெல்லம், அரிசி, பருப்பு போன்றவற்றை வாங்கித் தருவது உங்களுக்கு பெரிய பலனை கொடுக்கும்.

உங்கள் தலைமுறைக்கும் நல்லதை கொடுக்கும். கோயில்களில் இருக்கும் பசுக்களுக்கு தீவணங்களை வாங்கிப் போடுங்கள்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு பல அற்புதங்களை தரக்கூடிய கோயில் மதுரையில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். பிரம்ம முகூர்த்தத்தில் கோயிலுக்குச் செல்லுங்கள். நெய் விளக்கு ஏற்றினால் போதும். விநாயகரை தரிசனம் செய்துவிட்டுச் செல்லுங்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லுங்கள். கோபுர தரிசனம் செய்யுங்கள். ரங்கனை தரிசனம் செய்யுங்கள். கோயில் யானையை பாருங்கள். பொங்கல் வாங்கி யாருக்காவது தானம் செய்யுங்கள்.

மிதுன ராசி

இந்த ராசிக்காரர்கள் பழனியில் ராஜ அலங்கார தரிசனம் செய்யுங்கள். மிகப் பெரிய நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

ஆண்டு முழுவதும் சிறப்பாக வாழ்வீர்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்யுங்கள். வருடத்திற்கு ஒரு முறை திருச்செந்தூர் முருகனும் அபிஷேகம் செய்யுங்கள். ராஜ அலங்காரம் தரிசனம் செய்யுங்கள். தினமும் சண்முகரின் படத்தை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள் பெரிய அளவில் அனுகூலம் ஏற்படுவதற்கு குச்சனூர் சனி பகவானின் கோயிலுக்குச் செல்லுங்கள். கோயில் விபூதி பிரசாதத்தை வாங்கி அதை உங்கள் வீட்டு விபூதியுடன் சேர்த்து தினமும் வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி ராசி

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கிருக்கும் சனி பகவானுக்கு பசுநெய், விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து தரிசனம் செய்யுங்கள்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் மந்த்ராலயம் செல்லுங்கள். மூன்று முறை கோயிலை சுற்றுங்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் ஓஹோ என வாழ்க்கை இருக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லுங்கள். தேக ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். கிருத்திகையில் அபிஷேகத்தை பாருங்கள். ஆண்டு முழுவதும் சிறப்பாக இருங்கள். நல்லெண்ணெய் கொடுத்து தியானம் செய்துவிட்டும் வரலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபன் சுவாமியை தரிசனம் செய்யுங்கள். பயபக்தியுடன் தரிசனம் செய்யுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள். அன்னதானத்திற்கு கைங்கரியம் செய்யுங்கள். பெரிய அனுகூலம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் குருவாயூர் செல்லுங்கள். துலாபாரம் கொடுங்கள். குருவாயூரப்பன் நல்லதை செய்வார்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் திருவண்ணாமலைக்கு செல்லுங்கள். ஸ்ரீசைலம் செல்லலாம். சிவனை வழிபடுங்கள். சாப்பாட்டை வாங்கிக் கொடுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பஞ்சவடி அனுமன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அரிசி, பருப்பு கொடுத்துவிட்டு வாருங்கள். அனுமனின் ரட்சை வாங்கி வாருங்கள்.

கடன், பணப் பிரச்சனை, மனக் குழப்பம் ஆகியவை தீரும்.

Leave a Reply

Trending

Discover more from Tamil Vastu

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading