வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால் சில செடிகளை வளர்க்க வேண்டும் என்பது ஐதீகம்.. இதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. ஆன்மீக காரணமும் உள்ளது. அந்த செடிகள் என்ன தெரியுமா?
பெரும்பாலும், வீட்டில் பணம் செழிக்க அல்லது வீட்டில் பணம் இருந்தால் தங்குவதற்கு, வீட்டில் முக்கியமான வாஸ்து செடிகளை வளர்ப்பது மிகவும் முக்கியமானது.
சுத்தமான காற்று
பொதுவாக, நம் வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளும் இருப்பதுதான் மிகப்பெரிய ஆரோக்கியக் காரணி.. அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் பூக்கள் மற்றும் செடிகளை வளர்க்கலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படும்.
அதேபோல சில வகையான செடிகளை வீட்டுக்குள்ளும் வளர்க்கலாம்.. சில செடிகளை வீட்டுக்குள்ளேயே வளர்த்தால் அது வீட்டில் பிரச்சனைகளையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். அதே சமயம் சில செடிகளை வளர்ப்பது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும்.
மணி பிளான்ட்
உதாரணமாக மணி பிளான்ட்டை எடுத்துக் கொண்டால், அது காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சைன் போன்ற நச்சுக்களை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சையும் இந்த செடி உறிஞ்சுகிறது.
தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட் செடிகளை வைத்தால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து செல்வம் வரும் என்பது ஐதீகம். இந்த செடியை வடக்கு திசையில் மட்டும் வைக்க கூடாது.
மல்லிகை
மல்லிகைச் செடி பணப் பெருக்கத்திற்கு உகந்த தாவரமாகவும் கருதப்படுகிறது. எங்கு நல்ல வாசனை உள்ளதோ அங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே மல்லிகைச் செடியை வாசலில் வைப்பதன் மூலம் வீட்டிற்கு அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
தொட்டால் சிணுங்கி
வாஸ்து படி, இது ஒரு அதிர்ஷ்ட தாவரமாகும், இது தொட்டால் கீசிணுங்கி. இந்த செடி வாடாமல் இருக்க தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே போல் விஷ்ணு, சிவனை வழிபட வளர்க்கப்படும் சங்கு செடி.. குறிப்பாக நீல சங்கு செடியாக இருந்தால் கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வைக்கலாம். துளசி செடி லட்சுமி தேவிக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. எனவே, துளசி செடிகளை வீட்டு முற்றத்தில் வைக்க வேண்டும்.. இது குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. துளசியின் வாசனை வீட்டை நிரப்பும்.. பாசிட்டிவ் எனர்ஜியும் வீட்டில் கிடைக்கும்.
கருப்பு ஊமம்
கருப்பு அல்லது வயலட் கலர் ஊமத்தை செடியை வீட்டுக்குள்ளும் வளர்க்கலாம். இந்த செடி சிவபெருமானுக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. எனவே, துளசிச் செடியைப் போன்று இச்செடிகளுக்கும் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். பணம் கிடைப்பதுடன் பித்ரு தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
உங்கள் வீட்டில் பாம்பு செடியை வளர்ப்பது செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் தரும். இந்த செடிகளை படிக்கும் அறை அல்லது படுக்கையறையில் வைக்க வேண்டும்.
தென்னை மரம்
இந்த பட்டியலில் தென்னை மரங்களையும் சேர்க்கலாம்.. வீட்டில் தென்னை மரங்களை வளர்த்தால் குடும்பம் எல்லா வகையிலும் மேம்படும். எனவே, வீட்டில் தென்னை மரம் வளர்க்க இடம் இருந்தால், அதையும் நடலாம்.
கற்றாழை செடிகளை வீட்டிலும் வைக்கலாம்..இதனால் கற்றாழை பாசிட்டிவ் எனர்ஜியை தருவதுடன் காற்றை சுத்திகரிக்கும் குணமும் கொண்டது.
படுக்கையறை
படுக்கையறையில் நிறைய செடிகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் படுக்கையறைகளில் மல்லிகை, லாவெண்டர், மூங்கில், பீஸ் லில்லி போன்ற செடிகளை மட்டுமே வைக்கலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
ஆனால் எந்தெந்த செடிகளை வீட்டுக்குள் வளர்க்கக்கூடாது தெரியுமா? பருத்திச் செடியை வீட்டில் வைக்கக் கூடாது.. வீட்டிற்குள் துரதிஷ்டம் வரும் என்பதால்.. அதேபோல போன்சாய், பருத்திச் செடி, புளி, அத்திப்பழம் போன்றவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது என்கிறார்கள்.


Leave a Reply