ஒவ்வொரு மனிதனுக்கும் குல தெய்வம் தான் முதல் கடவுள். குலத்தைக் காக்கும் கடவுளிடம் வரம் கேட்டுத்தான் எமதர்மன் நம் உயிரைப் எடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் வாழும் மூதாதையரின் ஆவிகள் நமக்கு எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை. அழைப்புக்கு ஓடி வரும் குல தெய்வம் சில சமயங்களில் கோபம் கொள்கிறது.
இதற்குக் காரணம் நாம் நமது குல தெய்வத்தை மறந்ததே. குலதெய்வத்தை மறந்தவர்கள் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்கும் எளிய வழி இது! இப்பதிவின் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
சிலருக்கு தங்கள் குல தெய்வம் என்னவென்று கூட தெரியாது! சிலர் குலதெய்வத்தை சிலகாலம் வழிபட்டு வந்தாலும், ஒரு கட்டத்தில் அதனைப் பின்பற்றுவதை நிறுத்திவிடுகிறார்கள்.
பூஜைகளை மறத்தல், தாமதப்படுத்துதல் போன்ற விஷயங்களில் குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு. குலதெய்வத்தின் அருள் தடைபடும் போது வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அந்த பிரச்சனைகளை நம்மால் எளிதில் சமாளிக்க முடியாது.
ஒரு வீட்டில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால்! அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்று அர்த்தம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் தொடர்ந்து பிரச்சனைகள் இருக்காது. வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒரு மனிதனுக்கு குலதெய்வத்தின் அருள் தேவை. குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி வருபவர்களுக்கு இதுபோன்ற இடையூறுகள் ஏற்படுவதில்லை. குல தெய்வ வழிபாடு பித்ரு வழிபாட்டிற்கு சமம்.
நம் முன்னோர்களின் ஆசி பெற பித்ரு தர்ப்பணம் செய்வது எப்படி? அதேபோல் குல தெய்வ வழிபாட்டையும் தொடர வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்து பல இன்னல்களை எளிதில் கடந்து வந்தனர் நம் முன்னோர்கள்.
இன்று ஏற்பட்டுள்ள அவசரச் சூழ்நிலையால் அனைவரும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு ஓடுவதால் இறைவனின் மீது கவனம் இல்லாமல் போய்விட்டது.
கடவுளின் மீது கவனம் செலுத்த கடவுள் பல்வேறு பிரச்சனைகளை கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இறை சிந்தனையுடன் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.
வெள்ளி அல்லது வியாழன் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பௌர்ணமியின் போது, பூஜை அறையில் சிறிய தாம்பூலத் தட்டில் பச்சரிசியை நிரப்பவும்.
அதன் மேல் தாமிரம், பித்தளை அல்லது மண்ணால் செய்யப்பட்ட கலசம் போன்ற பாத்திரத்தை வைக்கவும். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றவும்.
அதனுடன் சிறிது பன்னீர் மற்றும் 2 ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி இலைகளை சேர்க்கவும். இந்த பூஜைக்கு குல தெய்வ மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கலாம். பூஜை அறையை முழுமையாக அலங்கரிக்கவும்.
பின்னர் கலசங்களை தொட்டு குல தெய்வ மந்திரத்தை 108 முறை தொடர்ந்து உச்சரிக்கவும். மந்திர உச்சரிப்பு முடியும் வரை கலசத்தில் இருந்து கையை எடுக்கக்கூடாது.
108 முறை ஜபித்த பிறகு, உங்கள் கையை அகற்றி, உங்கள் பிரார்த்தனைகளைச் செய்யுங்கள். குலதெய்வத்தின் வருகையை காலத்தில் உள்ள நீரின் அசைவு சொல்லும். இந்த எளிய பரிகாரத்தை செய்தால் உங்கள் குல தெய்வம் கூப்பிடும் குரலுக்கு ஓடி வரும்.


Leave a Reply