Home Spiritualityமார்கழி மாதத்தில் நீங்கள் இந்த மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்!!
மார்கழி மாதம் வழிபாடு

மார்கழி மாதத்தில் நீங்கள் இந்த மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்!!

by Arumugam K

மார்கழி மாதம் என்றாலே வாசலில் பெரிய கோலங்கள் போடுவதும், வீட்டில் விளக்கு ஏற்றுவதும், கோவிலில் கேட்கும் பஜனை ஓசையும் நினைவுக்கு வருகிறது. தற்காலத்தில் இந்த அனைத்து வழிமுறைகளையும் நாம் ஓரளவு பின்பற்றுகிறோம், ஆனால் அந்த அளவிற்கு இல்லை.

அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள், ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலனைத் தரும் ஆன்மீகத்தைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்கழி மாதம் வழிபாடு

மார்கழி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்களில் முதலில் செய்ய வேண்டியது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பது. காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தின் போது தீபம் ஏற்றினால், நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதற்கு அதிகாலை 5.30 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். எனவே அதிகாலையில் எழுந்து வாசலில் சாணம் அல்லது தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும். காலையில் எழுந்திருக்க முடியாது என்பதற்காக பலர் தூங்குவதற்கு முன்னே வாசலில் கோலம் போடுவார்கள் அவ்வாறு செய்வது தவறு என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதன் பிறகு, வாசலில் இரண்டு அகல் தீபம் ஏற்றி, அதன் பிறகு, பூஜை அறையில் தீபம் ஏற்றி, வீட்டில் சாம்பிராணி தூபம் போடுங்கள். இந்த நேரத்தில் முடிந்தால் சிறிது நெய்வேத்தியம் செய்து ஒரு கிளாஸ் பாலை நெய்வேதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள், நிச்சயம் கிடைக்கும். அடுத்த ஆண்டு மார்கழி மாதத்திற்குள் உங்கள் நிலை மாறி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இந்த மார்கழி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிபாடு தனுர் பூஜை ஆகும். மார்கழி மாதம் தானுர் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் அனைத்து கோவில்களிலும் தனுர் பூஜை காலையில் நடக்கும்.

அதில் ஒரு நாளாவது பூஜை செய்ய வேண்டும். இதைச் செய்ய முடியாதவர்கள் பூஜைக்கு அபிஷேகத்திற்கு பால் மட்டும் வாங்கி கொடுக்கலாம். இந்த ஒரு பூஜையை செய்தால் வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எனவே வாய்ப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த தனுர் பூஜையை செய்ய வேண்டும். முடியாதவர்கள் அபிஷேகத்திற்கு ஏதாவது வாங்கிக்கொடுங்கள்.

அடுத்ததாக நமது சந்ததியினர் வறுமையின்றி வாழ அன்னதானம் செய்வது. இம்மாதத்தில் ஒரு நாளாவது அன்னதானம் செய்தால், நம் தலைமுறை முழுவதும் வறுமையின்றி வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

முடியாதவர்கள் வீட்டில் பொங்கல் சுண்டல் படைத்து மார்கழி மாதம் காலையில் கோயிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுவும் அன்னதானம் என கருதப்படுகிறது. தேவர்களுக்கும், தெய்வங்களுக்கும் உகந்த இந்த மார்கழி மாதத்தில் இப்படி வழிபடுவதால் செல்வ வளமும் பெருகும்.

Related Posts

Leave a Comment